உலக செய்திகள்

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…

கனடாவின் டொரொன்டோ நகரில் நேற்றிரவு(22) நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 13 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரை நோக்கியும் அந்த நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதோடு பொலிசாரும் பதிலடி கொடுத்தனர். இதன்போது தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி சூட்டைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் பொலிசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சவுதி அரேபியாவில் ஏப்ரல் 18 முதல் சினிமா திரையரங்குகள் திறக்கப்படும்…

wpengine

இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை இல்லை

wpengine

வலுவான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு BMGF நிறுவனமானது ஆதரவளிக்கும் – பில் கேட்ஸ்

wpengine