உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கம்மன்பிலவுடனான பகிரங்க விவாதத்திற்கு தயார் – சஜின்

பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பிலவை திறந்த விவாதத்திற்கு வருமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சவால் விடுத்துள்ளார்.

கம்மன்பிலவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு யார் காரணம் என்பது தொடர்பில் விவாதத்திற்கு வருமாறே அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் உதமய கம்மன்பில தனக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிப்பதற்கு தொலைக்காட்சி மூலமான விவாதமே சிறந்தது என சஜின் வாஸ் குணவர்தனவிற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோரின் சதி முயற்சியே காரணம் என உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும் அந்த குற்றச்சாட்டை மேர்வின் சில்வா நிராகரித்திருந்த நிலையிலேயே உதய கம்மன்பிலவை திறந்த விவாதத்திற்கு வருமாறு சஜின் வாஸ் குணவர்தன சவால் விடுத்துள்ளார்.

Related posts

சவூதி இளவரசர் அலாவுதீன் பின் தலால் இலங்கை வருகை..

wpengine

உத்தியோகபூர்வ வாக்கு அட்டை விநியோகத்திற்கான விசேட தினம் இன்று

wpengine

அமில வீச்சு தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்

wpengine