உள்நாட்டு செய்திகள்

கரையோர மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் அறிவித்தல்…

ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை இன்றும் தொடரும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அறிக்கையொன்றை வௌியிட்டு வானிலை அவதான நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமாக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் மணிக்கு 70 கிலோ மீற்றர் தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் காணப்படும் என அந்நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் மற்றும் கரையோர மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

Related posts

இன்று முதல் சிறப்பு பேரூந்து ஒழுங்கை அமுலுக்கு..

wpengine

அவுஸ்திரேலிய சென்ற ஏஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் தாயகம் திரும்பினார்…

wpengine

இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவராக ரியாஸ் சாலி நியமனம்!!

wpengine