வணிகம்

கறுத்தக் கொழும்பானுக்கு சவாலாகும் ரிஜேசி மாம்பழ வகை…

இலங்கையின் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயம், யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ள ஆகிய இடங்களில் உருவாக்கப்படவுள்ளது. “நாமே வளர்த்து நாமே சாப்பிவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், எதிர்வரும் 28ம் திகதி
இந்த விவசாய அபிவிருத்தி திட்டம், முன்னெடுக்கப்படவுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த திட்டத்தின் கீழ் முதலாவது விவசாய அறுவடை வலயம், தம்புள்ள மற்றும் யாழ்ப்பாணத்தில் நிறுவப்படும்.

உலக வங்கியின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த விவசாய நவீனமயப்படுத்தல் திட்டத்தின் கீழ், ரிஜேசி (Tom & JC mango) வகையைச் சேர்ந்த ஒரு இலட்சம் மாங்கன்றுகள் நடுகை செய்யப்படும்.

ரிஜேசி மாம்பழம், இலகுவாக பயிரிடக் கூடியது. உலர் மற்றும் ஈரவலயங்களில் நன்றாக வளரக் கூடியது. ஆண்டு முழுவதும் காய்க்கக் கூடியது. இதற்கு உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் நல்ல கேள்வி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான கட்டுப்பாட்டு விலை

News Editor

“எமது பாரிய ஆடை தொழில்துறையில் மூன்றில் இரண்டு பங்கு பெண் தொழிலாளர் பலத்தைக் கொண்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

wpengine