உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம் இன்று பணிப்பகிஷ்கரிப்பில்…

அதிபர்கள் உள்ளிட்ட கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம் இன்று(04) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளது. இதில் 11 தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

புதிய நியமனங்கள் வழங்கப்படும் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடவுள்ளதாக இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழிற்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நீல் அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

சுகயீன விடுமுறையிலிருக்கும் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் சிலரும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இன்று(04) மூடப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

வரவு செலவு திட்டத்திற்கான யோசனைகளை முன்வைக்க கோரிக்கை…

wpengine

லண்டன் பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் இலங்கை வர்த்தகர்கள்…

wpengine

ரக்பி வீரர் வசீம் தஜூடீனின் கொலை வழக்கு மே 3ம் திகதி வரை ஒத்திவைப்பு..

wpengine