ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கழிவறைகளில் இனி இலவச வை-ஃபை!

பீஜிங் நகரில் இலவச வை-ஃபை வசதியுடன்கூடிய நூறு நவீன கழிவறைகளை அமைக்க பீஜிங் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் தொடர்ந்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அங்கு இந்த ஆண்டுக்குள் இலவசமாக வை-ஃபை இண்டர்நெட் வசதியுடன் கொண்ட நூறு நவீன கழிவறைகளை அதிகளவில் கட்டுவதற்கு பீஜிங் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, டோங்சோ, பாங்சான் மாவட்டங்களில் முதற்கட்டமாக இந்த வை-ஃபை கழிவறைகள் நிறுவப்படுகிறது. இதுதவிர, இந்நகரத்தில் ஆங்காங்கே ஏ.டி.எம் இயந்திரங்கள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்துகொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்தித்தர திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், கழிவறைகளுக்கு அருகிலேயே தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்காக ’பேபி சிட்டிங்’ வசதியும் செய்து தரப்படவுள்ளது.

ஒவ்வொரு கழிப்பறையும் சுமார் ஒரு லட்சம் யுவான் திட்ட மதிப்பீட்டில் கட்டிமுடிக்க மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

Related posts

உப்புத்தாளை காண்பித்து டேவிட் வார்னரை வழியனுப்பிய ரசிகர்கள்

wpengine

டெங்கு காய்ச்சலால் துடிக்கும் இலங்கை அணி வீரர்கள்

wpengine

ஆறிய கஞ்சி பழங் கஞ்சாகிய கதையிலிருந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மீலேளுகிறது.. – மஹேலவும் கிண்டல்…

wpengine