உள்நாட்டு செய்திகள்

காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை…

காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக கனிய எண்ணெய் வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் கனிய எண்ணெய் விநியோக மத்திய நிலையத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ள காணியை நேற்று(29) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அநுராதரபுரத்தின் பின்னர் கொள்கலன் ஊடாக வட பகுதிக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. சிலவேளைகளில், கொழும்பிலிருந்து கொள்கலன் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. இதற்கான விநியோக செலவு அதிகமாகும்.

இந்நிலையில், காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(rizmira)

Related posts

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்காக இலங்கை வரும் ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார்

wpengine

கோட்டாபய நாட்டில் இருந்து பயணமானார்

wpengine

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம்..

wpengine