Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காசாவில் சிக்கித்தவித்த இலங்கைக் குடும்பம் நாட்டை வந்தடைந்தது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  காசாவில் சிக்கித் தவித்த 4 பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் 24ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சின் தூதரக பிரிவு குடும்பத்தைத் திருப்பி வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.

அவர்கள் கொழும்பு வந்தவுடன், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.

கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள், எகிப்திய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான ரஃபா எல்லைக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீட்டனர்.

புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் (IOM) உதவியுடன் இவர்களுக்கான விமான சேவை ஏற்பாடுகளை வெளியுறவு அமைச்சகம் முன்னெடுத்திருந்தது.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஏற்பட்ட நெருக்கடியின் தொடக்கத்திலிருந்து கெய்ரோ மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்பில் காசா பகுதியிலிருந்து மொத்தம் 15 இலங்கையர்கள் ரஃபா எல்லை வழியாக மீட்கப்பட்டு பாதுகாப்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Related posts

ரயன் ஜெயலத் மற்றும் மதுகல்லே புத்த ரக்பித தேரர் ஆகியோருக்கு எதிராக பிடியாணை..

wpengine

பிற நாடுகளின் கொந்தராத்துக்களுக்காக, திருத்தியமைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் ஆதரிக்கமாட்டோம் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

wpengine

 அமெரிக்காவுக்கு ஏன் போனேன்: ஜனாதிபதி மகன் விளக்கம்

wpengine