ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காதலர் தினம் அடிப்படை மனித உரிமைக்கு விடுக்கும் சவால்!

றோமில் வாழ்ந்த கிறிஸ்தவ மதப் போதகரான வெலன்டைன் அரசனின் கட்டளையை மீறிகாதலர்களை திருமண பந்தத்தில் இணைத்த குற்றத்திற்காக மரணதண்டனைக்கு ஆளானார்.

அவரின் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலேயே அவர் மடிந்த தினமான பெப்ரவரி 14ஆம் திகதியை காதலர்கள் பரிசுத்தமான தினமாகக் கொண்டாடுகின்றனர்.

இதுவே காதலது தினத்தின் மகிமையாகும். காதலின் புனிதத்தையும் அர்த்தத்தையும் வெளிப்படுத்தும்,  தினத்தில் ரீன் ஏஜ் இளைஞர்கள் அதைக் கொச்சைப்படுத்தும் காரியங்களில் இறங்கியுள்ளமை குறித்து பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்தினம் நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது. கிராமப் புறங்களில் தார் வீதிகளில் காதலர்கள் தங்கள் பெயர்களில் முதல் எழுத்துக்களை இதயங்களில் அம்புமூலம் பாயச்செய்வதுபோல் வரைந்து விடுகின்றனர்.

இன்னும் சிலர் தங்கள் பெயர்களில் முழு எழுத்துக்களையும் பிரதான வீதிகளில் கூட பொறித்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

இன்னும் சிலர் சில பெண்களின் பெயர்களை தனியாக எழுதியும் விடுகின்றார்கள். இதனால் சம்பந்தப்பட்ட பெண்களும் பெற்றோரும் பல அசௌகரியங்களுக்கு ஆளாக வேண்டி ஏற்படுகின்றது.

இது அடிப்படை மனித உரிமைக்கு விடுக்கும் சவாலாகவும் காணப்படுகின்றது.

ஒருபோதும் காதலர்கள் தங்கள் பெயர்களை இவ்வாறு வாக்கு கேட்பதுபோல் பகிரங்கப்படுத்தி பாதையில், மதில்களில் வரைந்து அசிங்கப்படுத்திக் கொள்ள விரும்பமாட்டாகள்.

இது சில விசமிகளின் பொறுப்பற்ற நாகரீகமற்ற மற்றவர்களை அவமானப்படுத்தும் செயலாகவே இருக்குமென பெற்றோர் சந்தேகிக்கின்றனர்.

எனவே இத்தகைய காதலர் தின கலாசாரத்தை மேலும் வளரவிடாது கண்காணிப்பு செலுத்த வேண்டுமென பெற்றோர் பொலிசாரிடம் கோரிக்கை விடுக்கின்றனர்

Related posts

ஹரீனுக்கு PCR பரிசோதனை [VIDEO]

wpengine

21 வயது இளம் பெண்ணை ஆணாக மாற்றிய மருத்துவமனை

wpengine

காவற்துறையினர் மீது தாக்குதல்

wpengine