ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

காத்தான்குடி ரில்வானின் உடல்; இறுதியாக வெளியான நீதிமன்ற உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சியோன் தேவாலயத்தில் குண்டு தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி தற்கொலை குண்டு தாரி ரில்வானின் உடல் பாகங்களை மீள் தோன்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் படி புதைக்கப்பட்ட உடல் பாகங்களை இன்று 4 மணியளவில் தோண்டி எடுப்பதற்குரி நடவடிக்கைகள் நீதிமன்றதினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 26 திகதி மாலை இரகசியமாக மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் புதைக்கப்பட்ட மேற்படி தற்கொலை குண்டு தாரியின் உடலை அடக்கம் செய்ததற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நீதிமன்றத்தில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தை தூண்டினார்கள் என்று பொலிசாரால் குற்றம் சாட்டப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மாநகர சபை உறுப்பினர் செல்வி சுசிலா உள்ளிட்ட ஐவருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

Related posts

நாணயற் சுழற்சியில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி…

wpengine

CSN தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் இரத்து குறித்து நீதிமன்ற உதவியை நாடத் தயார் – வெலிவிட்ட.

wpengine

ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை அணியானது முன்னேற்றம்..

wpengine