உலக செய்திகள்

காம்சாத்கா தீபகற்ப பகுதியில் நிலநடுக்கம்…

ரஷ்ய நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள காம்சாத்கா தீபகற்ப பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காம்சாத்கா விரிகுடா பகுதியில் 76.2 கி.மீ. ஆழத்தில் அந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

காம்சாத்கா தீபகற்பத்தில் பல இடங்களில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதங்களோ, பொருட்சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என ரஷ்ய நெருக்கடி கால சூழல்கள் அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கின்றன.

Related posts

கட்டிடத்தில் மோதி தீப்பிடித்த விமானம் – 10 பேர் உயிரிழப்பு

wpengine

பாகிஸ்தான், பங்களாதேஷ் பெண்களை திருமணம் முடிக்க தடை

wpengine

கலிபோர்னியா காட்டுத் தீ – அவசரகாலநிலை பிரகடனம்

wpengine