உள்நாட்டு செய்திகள்

காரைநகர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இன்று நண்பகல் 12.00 மணியளவில் காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்திரம் என்பவரின் வீட்டிலுள்ள எரிவாயுஅடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

குறித்த வீட்டில் உள்ளவர்கள் மதியத்துக்கான சமையல் வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்தவேளை இவ்வாறு அடுப்பு வெடித்துச் சிதறியது.

எனினும் வீட்டுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் காரைநகர் பகுதியில் நிகழ்ந்த இரண்டாவது எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவமாகும்.

Related posts

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான 8 வது நபர் கண்டுபிடிப்பு

wpengine

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் சரண்

wpengine

நள்ளிரவு முதல் பெற்றோல் விலையில் மாற்றம்

wpengine