உள்நாட்டு செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

(FASTNEWS|COLOMBO) புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்று இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம், மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் மீனவர்களும் கடற்சார் ஊழியர்களும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 872

wpengine

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து ஜனாதிபதியே மீட்டெடுத்தார்..!

wpengine

தேயிலை தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்…

wpengine