உள்நாட்டு செய்திகள்

காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும்…

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக வடமேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts

பயணத்தடை தொடர்ந்தும் நீடிப்பு

wpengine

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு

wpengine

2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதம் நேரலையில்..

wpengine