உள்நாட்டு செய்திகள்

காவற்துறை ஆணைக்குழுவின் பரிசோதகர்கள் இடமாற்றம்…

காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய பிரதான காவற்துறை பரிசோதகர் 03 பேர் மற்றும் காவற்துறை பரிசோதகர் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமை காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கெட்டம்பொல காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த பிரதான காவற்துறை பரிசோதகர் எஸ்.எம்.டி சொய்சா நாவலப்பிட்டி நிலைய பொறுப்பதிகாரியாக மாற்றப்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பிரதான காவற்துறை பரிசோதகர் ஆர்.டி.ஏ ராஜபக்ஷ ஹெட்டிபொல காவற்துறை நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே கொத்மலை மற்றும் புலத்சிங்கள காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

நிவாரணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுமாயின் 117 என்ற தொலைபேசிக்கு அழைக்கும்படி கோரிக்கை

wpengine

இலங்கை தேசிய – சர்வதேச ரீதியாக முன்னேற்றம் அடையும்

wpengine

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக மற்றுமோர் முறைப்பாடு..

wpengine