உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணம் முத்தையா முரளிதரன்.. – ஆப்கான் வீரர்..

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் விளையாடி வரும் ஆப்கான் வீரர் ரஷித் கான், தன்னுடைய திறமையான பந்துவீச்சுக்கு காரணம் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தான் என குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் நான்கு ஓவர்களில் 16 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து முக்கியமான நேரத்தில் மோர்கன் விக்கெட்டை வீழ்த்திய ரஷித் கான், ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் இந்த ஆட்ட நாயகன் விருதை எனது சகோதரருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

முத்தையா முரளிதரன் போன்ற ஜாம்பவான்கள் துணையுடன் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக பந்து வீச முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

கொழும்பில் கோர விபத்து

Azeem Kilabdeen

சிறுவர் வன்முறை தொடர்பில் 64,000 முறைப்பாடுகள்…

wpengine

இன்று(18) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு…

wpengine