ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கியூபாவில் கிராமம் அமைக்க இலங்கையினால் ஒரு கோடிக்கு கிட்டிய தொகை நன்கொடை

(FASTGOSSIP| COLOMBO) – கியூபா நாட்டில் சூறாவளி காரணமாக சேதமடைந்த கிராமம் ஒன்றை புனரமைப்பதற்காக 50,000 அமெரிக்க டொலர் நிதியை (சுமார் 89 இலட்சம்) நன்கொடையாக வழங்க வெளிநாட்டு அலுவலக அமைச்சர் திலக் மாரப்பன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கியூபாவிற்கு இந்த வருடம் ஜனவரி மாதத்தில் உருவான சூறாவளி காற்றின் கரணமாக அவானாஹி றெக்லாவுக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது.

இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடத்தில் 60 வருடம் நிறைவடைவதை முன்னிட்டு, இரு நாடுகளுக்கிடையில் நிலவும் நட்புறவை மேலும் உறுதிசெய்யும் நல்லுறவின் அடையாளமாக 50ஆயிரம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

போதைப் பொருள் கடத்தலுக்கே அருந்திக, வென்னப்புவ ASP இனை இடமாற்றினாராம்

wpengine

பயணிகள் விமானத்துடன் மோத பார்த்த குட்டி விமானம்! நடுவானில் நடந்த திகில் சம்பவம்

wpengine

துபாய் பொலிசார் 04 பேர் மதூஷுடன் இலங்கைக்கு…

wpengine