(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஷேகர் ஷின்வாரி நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷமிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை ஷேகர் ஷின்வாரி, நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷமிடம், நீங்கள் என்னுடைய வருஙகால குழந்தைக்கு தந்தையாக இருக்க முடியுமா என்று வித்தியாசமாக காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதனுடன் இரண்டு எமோஜிக்களை சேர்த்திருந்தார்,
இதற்கு பதிலளித்த ஜிம்மி, நீங்கள் அந்த எமோஜிக்களை பயன்படுத்தியிருக்கவே தேவையில்லை என்று பதிலளித்தார்.
தற்போது இருவரின் இந்த டுவிட்டர் உரையாடல் தான் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

