உலக செய்திகள்

கிரிஸ்ட்சேர்ச் தாக்குதல் குற்றவாளி மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

(FASTNEWS| COLOMBO) – நியூஸிலாந்தில் நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதலாக கருதப்பட்ட கிரிஸ்ட்சேர்ச் (Christchurch) மதவழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளியான Brenton Tarrant மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக, நியூஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், குற்றவாளி மீது ஏற்கனவே 40 கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜூன் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் பலி

wpengine

ஜப்பானில் அவசரகால நிலை பிரகடனம்

wpengine

பெய்ஜிங் – நியூயார்க்குக்கு 2 மணிநேரத்தில் செல்லும் விமானம்…

wpengine