உள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு…

கிளிநொச்சி ஏ.9 ஆனையிறவு தட்டுவன்கொட்டி பகுதியில் நேற்றிரவு(18) இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து தட்டுவன்கொட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் ஒன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி தட்டுவன்கொட்டியைச் சேர்ந்த 29 வயதுடைய சிங்கராசா செந்தில்நாதன் என்பவரும் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த கரவெட்டியைச்சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துத் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

புதுப்புது பீதிகளை கிளப்பி அரசியலில் எம்மை பணியவைக்க முயற்சி

wpengine

திருகோணமலை எண்ணெய் குதங்களின் முழு உரித்துரிமையும் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட மாட்டாது – கபீர் ஹாஷிம்..

wpengine

முதலாம் தவணை பாடசாலை விடுமுறை இன்று(05)…

wpengine