உள்நாட்டு செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவை பதவியில் இருந்து அகற்றுமாறு கோரி ஹர்த்தால்…

கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை அப்பதவியில் இருந்து அகற்றுமாறு ஜனாதிபதியை வலியுறுத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அனுஷ்டிக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு, தமிழ் பிரதேசங்களிலுள்ள வர்த்தக சங்கங்கள், தனியார் போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு வழங்கியிருந்தன.

மட்டக்களப்பு நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மட்டுமே போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தனியார் போக்குவரத்து சேவைகள் முற்றாக ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசு அவசர காலநிலையினை பிரகடனப்படுத்த தீர்மானம்..

wpengine

‘ஆசியாவின் ராணி’ இலங்கையில்

wpengine

கொரொனோ – முகமூடிகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

wpengine