உள்நாட்டு செய்திகள்

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு மீளவும் திறப்பு.. பொதுமக்கள் அவதானம்..

களுத்துறை மாவட்டத்தில் நேற்று(12) பெய்த கடும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு மீளவும் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் புளத்சிங்கள, அகலவத்தை, இங்கிரிய மற்றும் அப்பகுதிகளில் உள்ள தாழ் நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, இன்றும்(13) நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

(rizmira)

Related posts

ஜனாதிபதியிடம் முன்னாள் பிரதமர் விசேட கோரிக்கை

wpengine

நாட்டை முடக்காது இருக்க உதவுங்கள்

wpengine

இன்று(24) அதிக வெப்பத்துடனான வானிலை…

wpengine