ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

குடும்பத்தோடு புலி படம் பார்த்த விஜய்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புலி;. இப்படம் அக்டோபர் 1ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாய் வெளியாகிறது. இந்தப் படத்தை முழுமையாய் பார்த்திராத விஜய், நேற்று தன் குடும்பத்தினருடன் படத்தைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு இசைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சர்வதேச தரம் வாய்ந்த தாகூர் பிரிவியூ திரையரங்கில் புலி படம் திரையிடப்பட்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் அவரது நெருங்கிய நண்பர்களும் படத்தை பார்த்தனர். படத்தை பார்த்த அனைவரும் விஜய்யின் நடிப்பையும் படத்தை உருவாக்கிய விதத்தையும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
‘புலி’ படத்தை சிம்பு தேவன் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related posts

கிளிநெச்சியில் பெண்ணொருவரை பலாத்காரம் செய்ய முயன்ற இராணுவ புலனாய்வாளர்

wpengine

கட்சி உறுப்புரிமை நீக்கம்; கைது செய்யுமாறு உத்தரவு ரஞ்சனின் எதிர்காலம் எப்படி?

wpengine

இந்நாள் அரசுக்கு பேரம் பேசுவதற்குத் தனக்கு நேரமில்லை… – யோஷித ஆவேசம்..

wpengine