உள்நாட்டு செய்திகள்

குப்பை தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி ஒப்புதலுக்காக கூடுகிறது நாடாளுமன்றம்..

குப்பை அகற்றுவதனை அத்தியாவசிய சேவையாக்கும் வகையில், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு ஒப்புதல் பெறுவதற்காக இன்று(28) பாராளுமன்றம் கூடுகின்றது.

குப்பை அகற்றும் நடவடிக்கைக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினால், பிடியாணைகள் இன்றி கைது செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 17 ஆவது உறுப்புரைக்கு அமைவாக குறித்த இந்த வர்த்தமானி அறிவித்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிதாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டால், குறித்த அந்த அறிவித்தல் விடுக்கப்பட்டு 10 நாளைக்குள், அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படல் வேண்டும்.

இதன்படி, ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நிறைவேற்றிக் கொள்வதற்காக இன்று பாராளுமன்றம் கூடுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

13 ஆவது திருத்தம் நாட்டுக்கு அவசியமானது – விரைவில் மாகாண சபைத் தேர்தல் – ரணில் அறிவிப்பு..!

wpengine

13 வருட கல்வி வேலைத்திட்டத்திற்கு பின்லாந்து ஒத்துழைப்பு…

wpengine

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி நாளை நாட்டிற்கு

wpengine