உள்நாட்டு செய்திகள்

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 8 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது…

இன்று(21) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 8 பேர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி நகருக்கு பெருமளவிலான போதைப்பொருளை விநியோகிக்கும் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

வெலிகந்த, கதிர்காமம், மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் போதைப் பொருள் போன்றன கைப்பற்றப்பட்டதாக அதிரடிப்படை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது

Related posts

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் பங்களாதேஷ் அணி தோல்வி

wpengine

ஜாதிக ஹெல உறுமய பௌத்த மதத்தை சீரழித்து விட்டனர் – துறவிகளின் குரல்

wpengine

ராடா நிறுவனம் குறித்த விசாரணைக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஹேரத் ஆஜர்

wpengine