உள்நாட்டு செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட ரயில் நிலையம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உனவட்டுன ரயில் நிலையம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

காலி, ஹபராதுவ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த தொற்றாளருடன் உனவட்டுன ரயில் நிலைய அதிபர் தொடர்புகளை பேணியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன் பின்னர் ரயில் நிலைய அதிபர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை பதில் ரயில் அதிபரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ரயில்வே பொது முகாமையாளருக்கு போக்குவரத்து அமைச்சர் அழைப்பு

wpengine

மனித தேவைக்கேற்ப சூழலை பேணுகிறோம்

wpengine

மாதம்பை பொலிஸ் நிலையத்திற்குள் தற்கொலை

wpengine