உள்நாட்டு செய்திகள்

கைதான தென்கிழக்குப் பல்கலைக்கழக 15 மாணவர்களுக்கும் பிணை…

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்து, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிகளின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி இன்று(01) உத்தரவிட்டுள்ளார்.

பல்கலைக்கழக வளாக நிர்வாகக் கட்டடத்தை இரு வாரங்களாக தொழில்நுட்பவியல் பீடத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் ஆக்கிரமித்து பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்து வருவதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸாரால் இம் மாணவர்களுக்கெதிராக அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இம் மாணவர்களை நிர்வாகக் கட்டடத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தும், இதனை அவமதித்த குற்றச்சாட்டின் பேரிலும் கடந்த வியாழக்கிழமை(25)ம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2018 ஆம் ஆண்டில் 91 பேர் எச். ஐ. வி யினால் பாதிப்பு…

wpengine

நாட்டின் சில பிரதேசங்களில் பலத்த காற்று…

wpengine

நிதி மோசடி சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் பஷில் இனது வழக்கு ஒத்திவைப்பு..

wpengine