உள்நாட்டு செய்திகள்

கொம்பனித்தெரு இரவு நேர கேளிக்கை விடுதி தாக்குதல் சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகள் தெளிவில்லை

கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் பணியாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நள்ளிரவில் தாக்கப்பட்டிருந்தனர்
இந்த தாக்குதல் சம்பவத்துடன் ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேனவிற்கும், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கும் தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் சீ.சீ.ரீ.வி கமராகவில் பதிவாகியிருந்த 90 செக்கன் வீடியோ காட்சி தெளிவற்றதாக காணப்படுகின்றது என மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நிறுவன உரிமையாளர், முகாமையாளர் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் ஏற்கனவே வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கம்?

News Editor

பாராளுமன்ற உறுப்பினர்களது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களும் இரத்து

wpengine

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine