உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : பிரேசில் அமைச்சர் இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் |  பிரேசில்) – உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசியும் பிரேசிலில் போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பிரேசிலுக்கு தடுப்பூசிகளைப் பெறுவதில் வெளியுறவுத்துறை அமைச்சர் எர்னஸ்டோ அராஜோ இராஜாங்க முறையில் தோல்வி அடைந்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

வெளியுறவுத்துறை அமைச்சர் எர்னஸ்டோ அரோஜோ, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்புடன் நெருக்கமான நட்புறவு மற்றும் சீனாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது ஆகிய காரணங்களால் பிரேசில் போதிய அளவு தடுப்பூசிகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு பொறுப்பேற்று பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சுப் பொறுப்பை எர்னஸ்டோ அரோஜா இராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

கச்சத்தீவை மீட்பதே பாஜகவின் இலட்சியம்: மோடியிடம் வலியுறுத்துவோம் – அண்ணாமலை

News Editor

ISIS இற்கு ஆட்சேர்த்த 18 வயது ஸ்பெயின் யுவதி (Including Images)

wpengine

ஈராக் மக்கள் போராட்டம்; 93 பேர் உயிரிழப்பு, 4000 பேர் காயம்!

wpengine