உலக செய்திகள்

கொரோனா முடிவுக்கு : உலகம் கனவு காணுகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | ஜெனீவா) – கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காணத் தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

கடந்த 03ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில், இணையவழியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி சோதனைகளின் முடிவுகள் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளன. எனவே கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம்.

கொரோனா தடுப்பூசி விநியோகத்தின் போது ஏழை நாடுகளை, பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த நாடுகள் மிதித்து விடக்கூடாது. கொரோனா தொற்று அதன் மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான பக்கத்தை மனித குலத்துக்கு காட்டியுள்ளது.

இரக்கம், சுய தியாகத்தின் ஊக்கம் அளிக்கும் செயல்கள், விஞ்ஞானம் மற்றும் புதுமையின் மூச்சடைக்கக்கூடிய சாதனைகள் மற்றும் ஒற்றுமையின் இதயத்தை தூண்டும் நிகழ்வுகளையும் கூட காட்டியுள்ளது என்றார்.

Related posts

புகையிரதம் தடம் புரண்டு விபத்து – 10 பேர் உயிரிழப்பு..

wpengine

சிங்கப்பூரில் இருந்து தென்கொரியா பத்திரிகையாளர்கள் இருவர் வெளியேற்றம்…

wpengine

அப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு கொரோனா

wpengine