உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தவுள்ளது..

கொழும்பின் சில பகுதிகளில் நடைபெற்று வரும் நிலத்தடி நீர் குழாய் திருத்த பணிகள் காரணமாக இன்று(27) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவ்வகையில், ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இப்பாவத்தை சந்தி வரையிலான பாதையின் போக்குவரத்து இன்று(27) இரவு 9.00 மணி தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புறக்கோட்டையில் இருந்து கொச்சிக்கடை ஊடாக மட்டக்குளி நோக்கி செல்லும் வாகனங்கள், ஹெட்டியாவத்தை சந்தியின் வலது பக்கமாக திரும்பி ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா மாவத்தை வழியாக, ப்ளுமெண்டல் மாவத்தையினுடாக அளுத் மாவத்தைக்கு செல்ல முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டக்குளியில் இருந்து பயணிக்கும் வாகனங்கள், மாதம்பிட்டிய பாதையினூடாக அல்லது சென் ஜேம்ஸ் மாவத்தையினூடாக புளுமெண்டல் வீதியை அடைந்து, ஹெட்டியாவத்தை சந்தியினூடாக பயணிக்கலாம் எனவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

சைட்டம் தொடர்பில் அரசு ஆதரவு காட்டி வருகிறது.. எமது போராட்டம் தொடரும்.. – GMOA

wpengine

எஸ்.எப் லொக்கா கைது..

wpengine

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு குழுவாக ஆதரவு – எஸ்.பி.

wpengine