உள்நாட்டு செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

(FASTNEWS|COLOMBO) – கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று(10) காலை 9 மணி முதல் நாளை(11) காலை 9 மணிவரை 24 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக் காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு நகரின் அபிவிருத்தித் திட்டம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, கடுவளை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிக்காவத்த மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் சொய்சாபுர வீட்டுத்திட்டம் ஆகிய பகுதிகளுக்கே குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

Related posts

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம்

wpengine

அரச ஊழியர்களுக்கு மற்றுமோர் கொடுப்பனவு

wpengine

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு..

wpengine