Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து

கொழும்பு – கண்டி வீதியில் வேவெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும், பின்னால் பயணித்த யுவதியும் காயமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் வரக்காப்பொலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 

பின்னால் பயணித்த யுவதி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடையவராவார். விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்ஓவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆரம்பநிலை நீதிமன்றத்திற்கு அமைச்சரவை அனுமதி

wpengine

அரம்பேபொல ரத்னசார தேரருக்கு பிணையில் செல்ல அனுமதி…

wpengine

காலி மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்

wpengine

Leave a Comment