உள்நாட்டு செய்திகள்

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இடமாற்றம்..

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, அனுராதபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்படவுள்ளார்.

நீதிச் சேவைகள் ஆணைக்குழு செயலகம் இத்தகவலை அறிவித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அனுராதபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிமதியாக பணியாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நீதிச்சேவையில் பணிபுரியும் அதிகாரிகள் பலர் அடுத்த வாரத்திற்கு இடையில் இடமாற்றப்படுவர் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு செயலகத்தின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிஹான் பிலப்பிட்டிய,கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

wpengine

14 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

wpengine