Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.

117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.

 

இன்றைய வாக்கெடுப்பில் மொத்தமாக 117 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்றது.

அதற்கமைய, நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதாக சபையில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

 

இதேவேளை, பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு அமைய பிரதி மேயராக ஹேமந்த குமார தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related posts

பண்டிகை காலத்தில் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம்

wpengine

நாடாளுமன்ற மலசலக்கூடங்களில் கோழி துண்டுகள்..!

wpengine

25,000 தண்டப்பணத்தில் எவ்வித மாற்றமுமில்லை – ராஜித.

wpengine