உலக செய்திகள்

கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் 1 கோடியை எட்டும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் 1 கோடியை எட்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது 215 நாடுகளில் பரவி உள்ளது

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி 9,532,128 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் 1 கோடியை எட்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பு பொது இயக்குநர் கூறுகையில், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளுக்கான ஆய்வுகள் தொடர்ந்தாலும், நம்மிடம் இருக்கும் கருவிகளை கொண்டு தற்போதைக்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசரமான பொறுப்பு நம்மிடம் உள்ளது என்ற நிதானமான நினைவூட்டலாக இது அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Related posts

கொவிட்-19 வைரஸ் : சீனாவில் மேலும் 653 பேருக்கு உறுதி

wpengine

ஊரடங்கு பிறப்பிக்க மறுக்கும் பாகிஸ்தான்

wpengine

சிரியா தாக்குதல்களில் 10 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு…

wpengine