உலக செய்திகள்

கொவிட் 19 : பாதிப்பு 3.1 கோடியைக் கடந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | சுவிட்சர்லாந்து) –  உலக நாடுகளில் மொத்த கொவிட் 19 பாதிப்பு எண்ணிக்கை 31,228,490 என்றும், இதனால் சுமார் 3 லட்சம் பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.

அதேபோல் உலக நாடுகளில் கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 965,036 என்றும், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 22,821,311என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே கொவிட் 19 இனால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தொடர்ந்தும் அமெரிக்காவில் முன்னிலையில் உள்ள நிலையில், இரண்டாவது இந்தியாவும் மூன்றாவது பிரேசிலும் இடம் பிடித்துள்ளது.

மேலும், உலக நாடுகளில் ஒருநாள் கொவிட் 19 பாதிப்பில் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்து வருகிற நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 54 இலட்சம் பேருக்கும் அமெரிக்காவில் 33,265 பேருக்கும் பிரேசிலில் 45 இலட்சம் பேருக்கும் புதிதாக கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனாவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி…

wpengine

கொரோனா பரிசோதனை நிறைவு- 454 பேருக்கு பாதிப்பு

wpengine

அரச பெண் ஊழியர்களது மகப்பேறு விடுமுறை 9 மாதமாக அதிகரிப்பு.

wpengine