Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டபாய என்னை கேட்டிருந்தால் வேண்டாம் என்றே சொல்லியிருப்பேன் -மஹிந்த

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நான் போகலாமா என கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) என்னை கேட்டிருந்தால் வேண்டாம் என்றே சொல்லியிருப்பேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளர்.

நான் அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பேன் பொருத்தமான தருணத்திலேயே ஓய்வு பெறுவேன் அதுவரை நான் போகமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைவராக தொடர்ந்தும் நீடிப்பீர்களா என்ற கேள்விக்கு அதனை கட்சியே தீர்மானிக்கவேண்டும் அவ்வாறு இல்லாவிட்டாலும் நான் ஒரு சட்டத்தரணி என்னால் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணிபுரிய முடியும் தேவையென்றால் அதனை செய்ய தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் தனது சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ குறித்த கேள்விக்கு அவர் தான் செய்துமுடித்திருக்கவேண்டிய விடயத்தை செய்து முடித்திருக்கவேண்டும் ஆனால் அவர் அரசியல்வாதியில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டிலிருந்து தப்பியோடுவது குறித்து உங்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டாரா என்ற கேள்விக்கு எனக்கு அவர் அது குறித்து தெரிவிக்கவில்லை என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கோட்டபாய ராஜபக்ஷ சென்றிருக்ககூடாது எனவும் குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இலங்கையிலிருந்து வெளியேற தீர்மானித்ததும் நான் போகின்றேன் என அவர் குறிப்பிட்டார் நான் எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு கோட்டபாய ராஜபக்ஷ மாத்திரம் காரணமல்ல முன்னைய அரசாங்கங்களும் நானும் கூட அதற்கு காரணம் பதில்கூறவேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தான் நம்பிய ஆலோசகர்களின் ஆலோசனைப்படி செயற்பட்டார் ஆகவே அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தமுடியாது பாதுகாப்பு செயலாளராக காணப்பட்ட வேளை அவர் சிறந்த நிர்வாக திறனை வெளிப்படுத்தினார் ஜனாதிபதியாக அவர் கடும் அழுத்தங்களை சந்தித்தார்.

அவர் முன்னர் கடும்போக்குவாதியாக காணப்பட்டார் தற்போது மென்மையானவராக மாறிவிட்டார் என தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ அவர் அதனை செய்திருக்க கூடாது ஆனால் அவர் அரசியல்வாதியல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கோட்டாபய ராஜபக்ஷ தன் முன் காணப்பட்ட பணிகளை சரியாக பூர்த்தி செய்திருக்கவேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

கடும் காற்றுடன் கூடிய காலநிலை – 03 மீனவர்களை காணவில்லை…

wpengine

எனது பரிசுத் தொகையில் ஒரு பகுதியை பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்குகிறேன் – டெனிஸ் வீரங்கணை ஓன்ஸ் ஜபேர்..!

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதமருக்கு அழைப்பு

wpengine