Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோழி இறைச்சி, முட்டை விலைகள் மேலும் குறையும்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் வாய்ப்புள்ளதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்த விலை குறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெட் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்தால் இந்நிலை மாறலாம் என அவர் தெரிவித்தார்.

சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்புவதால் முட்டையொன்று 35 – 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசியை பரிசோதனை இன்று

wpengine

மக்காவில் இடம்பெற்ற சம்பவத்தின் போது இலங்கை யாத்திரீகர்கள் இருவரை காணவில்லை

wpengine

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மறு அறிவித்தல் வரை பூட்டு

wpengine