Top Story 3உள்நாட்டு செய்திகள்

கோழி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமானது..!

கோழி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமானது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கோழிக்கறி, மீன், காய்கறிகள் விலை மிக அதிகமாக இருந்ததால், தற்போதும் அந்த நிலை உள்ளது.

இந்நிலை அடுத்த ஓரிரு வாரங்களுக்கு தொடரலாம் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியாது எனவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிகரித்துள்ள கோழி இறைச்சியின் விலை அடுத்த சில வாரங்களில் குறையும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படவில்லை என அதன் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 136 ஓட்டங்களால் வெற்றி…

wpengine

கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்…

wpengine

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்

wpengine