உள்நாட்டு செய்திகள்

கோவண ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு…

கொழும்பில் கோவணத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதியன்று, ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கான மானியம் மற்றும் இழப்பீடுகள் இல்லாமல் செய்தல், உரமானியத்தை உரிய முறையில் வழங்காமை, அறுவடைக்கு உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, குறித்த இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடங்கிய நாடளாவிய ரீதியில் உள்ள சகல பிரதேசங்களையும் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்பர் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கொழும்பு, கோட்டை ரயில்வே நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கவுள்ள குறித்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து, மகஜரொன்றையும் கையளிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு உரிய முறையில் பதிலளிப்பதற்கு அரசாங்கம் தவறும் பட்சத்தில், மாவட்ட ரீதியில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

 

(rizmira)

Related posts

நாட்டில் இனவாதத்தை தூண்டியது கூட்டமைப்பே..- நாமல் பதிலடி..

wpengine

கொரோனா : 11,000 ஐ கடந்தது

wpengine

சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் சலுகை

wpengine