ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சங்காவின் இடத்தினை தன்வசப்படுத்த குக் இற்கு வரம்…

இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்தாவது மற்றும் ஆறாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் பிற்பாடு தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் தலைவர் எலஸ்டெயார் குக் அறிவித்துள்ளார்.

33 வயதினை தாண்டியுள்ள குக், 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதங்களையும் 12,254 ஓட்டங்களையும் பெற்று இங்கிலாந்து அணி சார்பில் அதிக டெஸ்ட் ஓட்டங்களை குவித்த பெருமையை தன்வசப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுள்ள தரவரிசையில் 05வது இடத்தினை கடந்துள்ள இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் தலைவர் குமார் சங்கக்காரவை கடந்து செல்ல 06வது இடத்தினை பிடித்துள்ள குக் இற்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.

134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,400 ஓட்டங்களை பெற்றுள்ள சங்கக்காரவை முந்துவதற்கு குக் இற்கு இன்னும் 146 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.

மேலும், இங்கிலாந்து அணி சார்பில் அதிக டெஸ்ட் ஓட்டங்கள் பெற்றும் (12,254), அதிக டெஸ்ட் சதம் விளாசியும் (32), அதிகளவு பந்துகளை பிடியெடுத்தல் (173), அதிகளவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வீரர் (160) மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற 150 எல்லை மீறிய வீரராகவும் (11) குக் சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜிதவிடமிருந்து பறிபோகும் சுகாதார அமைச்சுப்பதவி சந்திரிக்காவிற்கு..

wpengine

ராஜபக்ச குடும்பத்தால் பிரபல பாடசாலை தமிழ் மாணவி கற்பழிப்பு

wpengine

இணையதளத்தில் புதிய படம் வெளியீடு: உரிமையாளர் கைது, இணையதளம் முடக்கம்!

wpengine