உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றும் நடவடிக்கை…

நகரில் காணப்படும் வாகன நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு சிலாபம் நகரில் நடைபாதைகளில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பெயர்ப் பலகைகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடைப்பாதைகளில் வர்த்தக நிலையப் பெயர்ப்பலகைகள் காணப்படுவதால் பாதசாரிகள் நடைபாதையில் பயணிக்காது பிரதான வீதியில் பயணிக்கின்றனமையினால், வாகன நெரிசல் அதிகமாக ஏற்படுவதுடன் விபத்துக்கள் நேரிடுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் முதலில் வியாபாரிகளுக்கு தெளிவூட்டல்கள் மற்றும் ஆலாசனைகளை வழங்கப்படுவதுடன், அதற்கமைய அவர்கள் செயற்படாவிட்டால் வழக்கு தொடரவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

பிரதமரின் செயலாளர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில்

wpengine

எதிர்கட்சித் தலைவர் மாலைதீவுக்கு சுற்றுப்பயணம்

wpengine

நாடு முழுவதும் பாரிய பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் மின்சார சபை..!

wpengine