ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சதுரிக்கா சிறிசேனவின் பெயரில் மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம்…

ஜனாதிபதியின் புதல்வி சதுரிக்கா சிறிசேன தனது பெயரில் மதுபான விற்பனை அனுமதிப் பத்திரமொன்றை பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின் போது போதைப் பொருள் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அத்துடன் பெண்கள் மதுபானம் விற்பனை செய்வதற்கும் கொள்வனவு செய்வதற்கும் சட்டரீதியாக விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த நிதியமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் முயற்சித்தபோது ஜனாதிபதி கடுமையான எதிர்ப்பை வௌியிட்டிருந்தார்.

குறித்த இந்த அனுமதிப்பத்திரம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Rizmira

Related posts

சவுதியில் இருந்து வந்த கணவன் மனைவியின் காது, மூக்கைக் கடித்துக் குதறினார் – யாழில் சம்பவம்

wpengine

பங்காளி உடன் நாளை மோதவுள்ள போட்டிக்கான முன் ஆயத்தம் (PHOTOS)

wpengine

இலங்கை – சீனா : முறுகல் நிலை ஆரம்பம்

wpengine