உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சத்தியாகிரகத்தில் இருக்கும் துறைமுக ஊழியர்களுக்கு கால அவகாசம்..

தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக, அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று 14ம் திகதி அவகாசம் வழங்கியிருப்பதாக ஹம்பாந்தோட்டை துறைமுக சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஏற்றுக் கொள்ளும் விதமான தீர்வொன்றை வழங்குவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்திருப்பார் என்று அந்த சங்கத்தின் தலைவர் ஐ.கே.ஒமேஷ் கூறினார்.

இது தொடர்பில் அமைச்சரின் ஊடகப் பேச்சாளரிடம் வினவிய போது, இன்றைய தினம் துறைமுக சேவையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்தை மேற்கொள்ள அமைச்சரால் அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறினார்.

இதற்கிடையில் குறித்த பிரச்சினை தொடர்பாக நேற்று இரவு அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறினார்.

நாளை பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் பணிக்கு திரும்பாவிடின் பணியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

சீன பாதுகாப்பு அமைச்சர் சீனாவுக்கு

wpengine

பரீட்சைகளுக்கான திகதிகள் – தீர்மானம் இன்று

wpengine

பாகிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை விஜயம்

wpengine