உள்நாட்டு செய்திகள்

சத்துரிக்கா, தந்தையின் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கிறாரா? கேள்விக்கு இன்னும் பதிலில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா தமது தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்துகிறாரா? என்ற கேள்விக்கு இன்னும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு பதிலளிக்கவில்லை என்று கொழும்பின் ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம், சத்துரிக்கா, அரசாங்கப் பணியாளர்களை அழைத்து சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

இதனையடுத்து அவருக்கு ஏதேனும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதா? என்று தேடிப் பார்த்த போதும் அவ்வாறு வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

இதனையடுத்து கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவை தொடர்புகொண்ட போதும் உரிய பதில்கள் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் ஹரின்ர பி தஸநாயக்கவை தொடர்கொண்ட போது, ஜனாதிபதிக்காக தாம் செயற்படுவதன் காரணமாக தமக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ஊடகப்பிரிவின் உதவிப் பணிப்பாளர் சுனில் ஜெயசேகரவை தொடர்புகொண்ட போது, தமக்கு தெரிந்தவரை சத்துரிக்கா எவ்வித அரசாங்கப் பதவிகளையும் கொண்டிருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு

wpengine

சோபித்த தேரர் பயன்படுத்திய சுமார் 2 கோடி பெறுமதியான மோட்டார் வாகனம் குறித்து விசராணை..

wpengine

கடைகளிற்கு சாப்பாடு விற்று உயர்தர பரீட்சையில் சாதனை

wpengine