உள்நாட்டு செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை..

சபாநாயகர் கரு ஜயசூரியவின் நடவடிக்கைக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளது.

அண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு சபாநாயகரின் நடவடிக்கையே காரணம் என கூட்டு எதிரணி சுட்டிக்காட்டியுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் உடன்படும் சில விடயங்களைக் கூட, பாராளுமன்ற அமர்வுகளில் சபாநாயகர் மாற்றிவிடுவதாகவும் குறித்த எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

சபாநாயகர் சபையில் சகல கட்சிகளுக்கும் பொதுவாக செயற்பட வேண்டியவராக இருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் கூட்டு எதிர்க் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கூட்டு எதிர்க் கட்சி கொண்டு வரவுள்ள சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி உட்பட அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் கூட்டு எதிரணி தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

#rishma

Related posts

முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு

wpengine

அதிவேக வீதியில் வேகத்தினை குறைத்து பயணிக்குமாறு கோரிக்கை…

wpengine

இதுவரை 47,922 பேர் கைது

wpengine