உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இடையில் இன்று(02) கலந்துரையாடல்…

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் சில அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இடையில் இன்று(02) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று(02) காலை 10 மணிக்கு குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் சபாநாயகரின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வேட்புமனுவை கையளித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்

wpengine

இலங்கையில் ஜூலை 29 இன் முக்கியத்துவம் பற்றி மஹிந்த……………

wpengine

“கிணற்றுத் தவளை என்ற நிலையிலேயே ஜே. வி. பி செயல்பாடு”:திஸ்ஸ அத்தநாயக்க எம். பி

News Editor