உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சமிந்த விஜேசிறிக்கு பதிலாக நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதையடுத்து வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார்.

அவர் 2020 பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 31,307 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்ததாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உதயங்கவின் சிவப்பு பிடியாணை கோரிக்கை 2வது தடவையும் நீதிமன்றினால் நிராகரிப்பு.

wpengine

சபாநாயகர் ஆசனத்தில்இருந்து எழுந்து சென்றார். (Update)

wpengine

சபைத் தலைவர், பிரதம கொறடா நியமனம்

wpengine