Uncategorized

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற கூப்பன் முறைமை: நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஹட்டன் – டிக்கோயா நகர சபைக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்காக நுகர்வோரை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று 30.05.2022 திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

அம்பகமுவ பிரதேசசபையின் செயலாளர் ருவனி சிதாரா கமகே தலைமையில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் ஹட்டன் – டிக்கோயா நகர சபை உத்தியோகத்தர்கள் இனைந்து இந்த பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் – டிக்கோயா நகர சபை மற்றும் ஹட்டன் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. தேசிய அடையாள அட்டை மற்றும் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அல்லது குறித்த வீட்டின் ஏப்ரல் மாத்ததிற்கான மின் பட்டியல் உள்ளிட்டவைகள் இதன்போது பரிசீலிக்கப்பட்டு எந்த முகவர் நிலையத்தில் எரிவாயு பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர் உத்தேசித்துள்ளாரோ அந்த முகவர் நிலையம் குறிப்பிடப்பட்டு கூப்பன் ஒன்று விநியோகிக்கப்பட்டது.

Related posts

திருமண நிகழ்வில் இந்தியாவின் தேசியக்கொடியேற்றம்

wpengine

இந்திய ரூபாயினை இலங்கையர்கள் கையிருப்பில் வைத்திருக்க அனுமதி..!

wpengine

கணனியிலிருந்து பென்டிரைவ்களை அகற்றும்போது SAFELY REMOVE அவசியமா?

wpengine